ஓடும் காரில் இருந்து விழுந்த குழந்தை; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் – வீடியோ

ஓடிக்கொண்டிருந்த காரில் இருந்து தவறி விழுந்த சிறுமி ஒருவர் அதிர்ஸ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் மலப்புறம் பகுதியில் இருந்து கோட்டக்கல் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த சிறுமி, கார் வளைவில் திரும்பிய போது வெளியே விழுந்தார்.

காரின் கதவு மூடாமல் இருந்த‌தால் இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. எதிரே வந்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால், சிறுமி அதிர்ஸ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

பின்னால் வந்த வாகனம் சுதாரித்து பிரேக் பிடித்து நின்றது. குழந்தை இருந்த காரும் உடனே நிறுத்தப்பட்டு, உள்ளே இருந்து வந்த நபர் பதறியபடி குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார்.

பின்னால் வந்த வேன் உடனடியாக நிறுத்தப்பட்டதால், குழந்தை மீது மோதாமல் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.


20 thoughts on “ஓடும் காரில் இருந்து விழுந்த குழந்தை; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் – வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/