‘பல பெண்களை கர்ப்பமாகியுள்ளார்’ – பிரபல நடிகர் பற்றி ஶ்ரீரெட்டி பகீர் புகார்!

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பிரபல ஹீரோவை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார், சர்ச்சை நடிகை ஶ்ரீரெட்டி. மீடூ புகார்களுக்கு முன்பு மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது ஸ்ரீரெட்டி விவகாரம்.

தெலுங்கு சினிமா மட்டுமின்றி தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ், விஷால், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

சினிமா வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், தெலுங்கு சினிமாவில் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஶ்ரீரெட்டி.

தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் மீது மீண்டும் ஸ்ரீரெட்டி கூறியிருக்கும் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என் வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். பவன் உங்களால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியவில்லை. பல இளம்பெண்களை கர்ப்பமாக்கியுள்ளீர்கள்.

பவன் பல பெண்களுடன் விளையாடுவார், பல இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டார். அவரால் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் புகார் கொடுக்க தயாராக உள்ளனர் என்று பவன் கல்யாண் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

மேலும் நான் ஐதராபாத்தில் ஏற்கனவே இருந்த வீட்டில்தான் இருக்கிறேன், சிலர் பவன் கல்யாணையும், அவரது தொண்டர்களையும் பார்த்து பயந்து சென்னைக்கு ஓடிவிட்டதாக வதந்தி பரப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த பவன் கல்யாண், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பற்றி பேச எவ்வித தகுதியும் இல்லை என ஆவேசமாக பதிலளித்துள்ளார். மேலும் பவன் கல்யாணால் ஆந்திர முதலமைச்சராக மட்டுமல்லா, ஒரு வார்டு கவுன்சிலராக கூட வர முடியாது என்றும் கொந்தளித்துள்ளார் ஸ்ரீரெட்டி.


LATEST FEATURES:

Tag: , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *