கிராமி விருதுக்கு கடல் கன்னியாக வந்த பிரியங்கா சோப்ரா! வீடியோ

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டேபிள்ஸ் மையத்தில் நடந்த கிராமி விருது விழாவில் தன் கணவர் நிக் ஜோனாசஸ் உடன் சென்றுள்ளளார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.

கிராமி விருது விழாவில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரியங்கா சோப்ரா இந்த குடும்பத்தில் இருப்பதில் பெருமையடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதில் அவர் அணிந்திருந்த உடை மாபெரும் சர்ச்சைக்குள் சிக்க வேண்டியது. ஏன் சர்ச்சை ஆகவில்லை என்று பார்த்தால், பிரச்னை செய்யும் சமூக போராளிகளே இந்த புகைப்படங்களை ஜூம் செய்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டேபிள்ஸ் மையத்தில் நடந்த கிராமி விருது விழாவில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த கூடைப்பந்து வீரர் கோப் பிரையண்டிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது ஜெர்சி எண்ணான 24 தனது விரல் நகத்தில் பிரியங்கா சோப்ரா எழுதியுள்ளார்.

பிரியங்கா சோப்ராவின் இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.Comments are closed.

https://newstamil.in/