நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி!
மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான கார்த்திக் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் 80,90-களில் பல வெற்றிப் படங்களை கொடுத்து, ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் நடிகர் கார்த்திக். நடிகர் முத்துராமனின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானாலும், தனது நவரச நடிப்பால் விரைவிலேயே உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்த்தை எட்டினார்.
தொடர்ந்து, 2018-ல் நாடாளும் மக்கள் கட்சியை கலைத்த கார்த்திக், மனித உரிமைகள் காக்கும் கட்சி என்பதை தொடங்கினார். வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக-வுடனே கூட்டணியை தொடர போவதாகவும் அதிமுக, பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய போவதாகவும் சமீபத்தில் கார்த்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர்கள் அறிவுரையின்படி சில தினங்களாக ஓய்வில் இருப்பார் என உறவினர்கள் தெரிவித்திருக்கிறார்கள்
Comments are closed.