அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம்: 5 பேருக்கு சாகும் வரை ஆயுள்
அயனாவரத்தில் 11 வயது சிறுமியை அப்பார்ட்மென்ட்டில் பல நாட்களாக 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 15 பேர் குற்றவாளிகள் என போக்சோ கோர்ட் அறிவித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலையில் இந்த விவகாரம் சிறுமியின் குடும்பத்தாருக்குத் தெரியவரவே, அவர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, சிறையில் இருந்த பாபு என்ற நபர் இறந்துவிட்டார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம், தோட்டக்காரர் குணசேகரனுக்கு எதிரான சாட்சிகள் இல்லாததால், அவரை விடுவித்தது.
எஞ்சிய 15 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம், தண்டனை விவரங்களை இன்று அறிவித்தது. 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், 4 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.