Thursday, September 10, 2026
ENTERTAINMENT

தனுஷின் 43வது படத்தை இயக்கும் கார்த்திக் நரேன்

துருவங்கள் 16 படம் மூலம் கவனம் ஈர்த்தவர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தை அடுத்து நரகாசூரன் படத்தை இயக்கினார்.இப்படம் நிதி சிக்கலால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த கவுதம் வாசுதேவ் மேனன் படத்திலிருந்து விலகினார். பின்னர் சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் திரைக்கு வரவில்லை.

இதையடுத்து அருண் விஜய்யை வைத்து மாபியா என்ற படத்தை எடுத்துள்ளார். இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் 21-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில் தனுஷை இயக்குகிறார் கார்த்திக் நரேன், தனுஷின் 43வது படமாக உருவாகும் இதனை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

ஏற்கனவே இந்நிறுவனம் தனுஷை வைத்து தொடரி, சமீபத்தில் வந்த பட்டாஸ் படங்களை தயாரித்தது. மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கின்றன. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.


Comments are closed.