சீயான் விக்ரம் 58 படத்தின் தலைப்பு “கோப்ரா”?

சீயான் விக்ரம் நடிப்பில் டிமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கி வருகிறார்.

‘விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தை முடித்துவிட்டு விக்ரம், விரைவில் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்லவுள்ளதால் விகர்ம் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்த படத்திற்கு “அமீர்” என்று படடைட்டில் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அப்போது அதை படக்குழு மறுத்தது. தற்போது “கோப்ரா” என்ற டைட்டில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வரும் ஜனவரி 1ஆம் தேதி இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவிருப்பதாகவும், அப்போதுதான் இந்த படத்தின் டைட்டில் ‘அமீர்’ அல்லது ‘கோப்ரா’ என்பது உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.



Comments are closed.

https://newstamil.in/