மோடி கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் – விவசாயியின் மோடி பாசம்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது எரகுடி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சங்கர்.

ஒவ்வொரு முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போதும் “கோ பேக் மோடி” ட்ரெண்டாகி வரும் அதே தமிழகத்தில் மோடிக்கு கோவில் எழுப்பி வணங்கி வருகிறார் விவசாயி சங்கர்.

இவர் ஒரு விவசாயி கல்யாணமாகி பானுமதி என்ற மனைவி உள்ளார், இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

அதன்படி தனது விவசாய தோட்டத்தில் ஒரு பகுதியில் மோடியின் அரை உருவ சிலை ஒன்றை வைத்து கோவில் எழுப்பி வழிபட்டு வருகிறார். தினமும் பாலபிஷேகம், தீபாராதனை காண்பித்து வழிபட்டு வருகிறாராம்.

இதுகுறித்து கூறியுள்ள சங்கர் ‘நான் சிறுவயது முதலே மோடியின் தீவிர ரசிகனாக இருந்தேன். அவருக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆசை. ஆனால் விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காததால் அது முடியவில்லை. தற்போது கிடைத்த ஓரளவு பணத்தை கொண்டு இந்த கோவிலை கட்டியுள்ளேன். விரைவில் கட்சி தலைவர்களை அழைத்து கும்பாபிஷேகம் செய்யலாம் என இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


153 thoughts on “மோடி கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் – விவசாயியின் மோடி பாசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/