பட்டாகத்தியில் கேக் வெட்டிய மாப்பிள்ளை கைது!
சமீபகாலமாக பட்டாகத்தியில் கேக் வெட்டி, தனுக்குதானே வேட்டு வைத்துக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. அந்த வகையில், அண்மையில் சென்னை திருவேற்காடு பகுதியில், திருமணம் ஒன்று நடந்தது, கல்யாண பெண்ணுடன் சேர்ந்து அரிவாளால் மண மேடையில் கேக் வெட்டிய மாப்பிள்ளை, அந்த கேக்கை எடுத்து புது மனைவிக்கு ஊட்டியும் விட்டார்.
அந்த வீடியோ வைரல் ஆன நிலையில் விசாரணையை முடுக்கிவிட்ட போலீசார், கோயம்பேட்டில் உள்ள தனது மாமியார் வீட்டில் இருந்த புது மாப்பிள்ளை புவனேஷை கைதுசெய்தனர்.
இந்த கும்பலில் இருந்த மோகன்குமார் என்பவர் ரூட்டு தல விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே சிக்கியவர் என கூறப்படும் நிலையில் அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் புவனேஷ் மற்றும் விக்கி, நிஷாந்த், மணி, கண்ணன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் அனைவரும் அவர்களுடைய பெற்றோருடன் அம்பத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் ஈஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மணமகன் புவனேஷ் உள்பட அவரது நண்பர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.. இனிமேல் இப்படி நடந்து கொள்ள மாட்டோம் என்ற உறுதிமொழி எழுதி வாங்கிக்கொண்டு, அவர்கள் எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Comments are closed.