ஐபிஎல் 2020 ஏப்ரல் 15 க்கு ஒத்திவைக்கப்பட்டது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த உலகளாவிய கவலையைத் தொடர்ந்து மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவிருந்த 13 வது இந்தியன் பிரீமியர் லீக் 15 ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

13 வது இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் ஆட்டம் மார்ச் 29 ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில். கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக போட்டி ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

பி.சி.சி.ஐ.யின் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா தலைமையில், வாரியத்தின் தலைமையகத்தில் இன்று முன்னதாக சந்தித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், டெல்லி அரசு தேசிய தலைநகரில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு தடை விதித்துள்ளது மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான தொடக்க போட்டிக்கான டிக்கெட் விற்பனையை மார்ச் 29 அன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சிவசேனா மகா விகாஸ் அகாடி அரசு தடை செய்துள்ளது . பி.சி.சி.ஐ யின் முழுமையான அதிகாரப்பூர்வ அறிக்கை நாளை எதிர்பார்க்கப்படுகிறது.



Comments are closed.

https://newstamil.in/