60ஸ் கிட்டான எஸ்.ஜே சூர்யா கடைசிவரை சிங்கிள் தான் – நெட்டிசன்கள் கிண்டல்

மேயாத மான் படம் மூலம் புகழ் பெற்ற நடிகை பிரியா பவானி சங்கர், தனது காதலர் யார் என்பதை தற்போது அறிவித்திருக்கிறார்.

டிவியில் நடிக்கும் போது சரி, அதற்கு பின்னரும் சரி இவரை சுற்றி காதல் செய்திகள் இறக்கை கட்டி பறந்தன. சமீபத்தில் கூட இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா உடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார்.

இந்த நிலையில் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள ப்ரியா பவானி சங்கர், தனக்கு ஏற்கனவே கல்லூரி காதலன் இருப்பதை உறுதி படுத்தி இன்ஸ்டாகிராமில் கவிதை ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் 10 வருடத்திற்கு முன்பாக கல்லூரியில் சராசரி அழகுடன் இருக்கும் போதே தன் மீது காதல் கொண்டு தெரிவித்தவன் அவன் என்றும் தற்போது புதிதாக இருக்கும் தன்னை அதே அன்பு மாறாமல் தன்னுடன் இருப்பது ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

சிதைந்து போனவற்றை மனம் உடைந்த ஒருவன் தேர்ந்தெடுப்பது என்பது எளிதான விஷயமல்ல என்று ஆச்சர்யத்துடன் குறிப்பிட்டுள்ளா ப்ரியா பவானி சங்கர், தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவள் வாழ்க்கையில் அவனை போல ஆண் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுவதாக கூறி தனது காதலனுடன் இருக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அதற்கு சில ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் சிலர் அய்யோ அப்படி சொல்லாதீங்க…! என்று கமெண்ட்டில் கவலை தெரிவித்துள்ளனர்.

டுவிட்டரில் பற்றவைக்கப்பட்ட காதல் வதந்தீயை, இன்ஸ்டாவில் கவிதை எழுதி கல்லூரி காதலனால் அணைத்திருக்கிறார் ப்ரியா பவானி சங்கர் என்று கூறும் நெட்டிசன்கள், 60ஸ் கிட்டான எஸ்.ஜே சூர்யா கடைசிவரை சிங்கிள் தான் போல என்றும் கலாய்த்து வருகின்றனர்..!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *