தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு

சென்னை: திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுகவுடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

மதிமுக தரப்பில் 12 தொகுதிகள் கேட்கப்படுவதாகவும் அதனால் தான் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வருவதாகவும் தகவல் வெளியான நிலையில் இன்று திமுக – மதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கடந்த தேர்தல்களில் எல்லாம் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிட்டதே இந்த முறை ஏன் இந்த மனமாற்றம் என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வைகோ, “ஒரு கட்சி 12 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட்டால் தான் 5 சதவீத அடிப்படையில் ஒரே சின்னத்தில் எல்லா இடங்களிலும் போட்டியிடலாம்.

மேலும் பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக திமுகவோடு கைகோர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக முதலமைச்சராக வர தகுதியான வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பார்க்கிறேன் என்றார்.



Comments are closed.

https://newstamil.in/