சென்னையில் எதிர்க்கட்சிகள் பேரணி துவங்கியது

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தலைமையில் பேரணி நடைபெறுகிறது. காலை 09.00 மணிக்கு எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையிலிருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடக்கிறது.

இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கே.எஸ்.அழகிரி, கி.வீரமணி, வைகோ எம்.பி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் எம்.பி, காதர்மொய்தீன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதன் காரணமாக சென்னை புதுப்பேட்டை செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேரணிக்கு 2 கூடுதல் ஆணையர்கள், 12 துணை ஆணையர்கள் உள்பட 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் முதற்கட்டமாக 2 ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும் என காவல்துறை வட்டார தகவல் கூறுகின்றன. அதேபோல் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா, வருண் உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.



Comments are closed.

https://newstamil.in/