கள்ளக்காதல் – மணமகன் தந்தை, மணமகள் தாயுடன் ஓட்டம்!
குஜராத்தில், ஓர் இளம் ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், மணமகனின் தந்தைக்கும், மணமகளின் தாய்க்கும் திடீரென காதல் மலர்ந்ததால், இருவரும் வீட்டை விட்டு ஓடினர். இதனால், இளம் ஜோடியின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 10ஆம் தேதி, மணமகனின் தந்தை காணாமல் போயுள்ளார். அதேவேளையில், மணமகளின் தாயாரும் காணாமல் போயுள்ளார். இருவரையும் தேடிப்பார்த்த உறவினர்கள் எங்கும் காணாததால் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறியதாவது: ராஜேஷ், ஸ்வாதி ஆகியோர், இளம் வயதில் அருகருகே உள்ள வீடுகளில் வசித்துள்ளனர். இருவரது குடும்பத்துக்கும் நல்ல பழக்கம் இருந்திருக்கிறது. இருவரும் இளம் வயதில் காதலித்ததாகவும், அப்போது ஓடிச் சென்று திருமணம் செய்ய முயற்சித்ததாகவும் தெரிகிறது.
ஆனால், வைர வியாபாரி ஒருவருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்துவிட்டதால், பின்னாளில் இருவீட்டாரும் நண்பர்களாக பழகியுள்ளனர். இந்த நிலையில் தான், நண்பர்கள் மூலமாக அவர்களது பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்க ஏற்பாடு நடந்தது. இதற்கிடையே, ராஜேஷ் – ஸ்வாதி இடையே, இளமைக் காதல் மீண்டும் மலர்ந்தது.
அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில், பழைய காதலில் இருந்த இருவரும் ஓடிவிட்டதாக அவர்களின் நெருங்கிய நண்பர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments are closed.