‘சேலத்தில் வாழப்பாடியில் ஐ.பி.எல் போட்டி நடக்கும்; தோனி விளையாடுவார்’ – வீடியோ

சேலம் வாழப்பாடியில் 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.8 கோடி மதிப்பிலான புதிய கிரிக்கெட் மைதானத்தை முதல் அமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் ஆகியோர் பங்கேற்றனர். பிசிசிஐ முன்னாள் தலைவரும் தொழிலதிபருமான சீனிவாசனும் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் சீனிவாசன் பேசுகையில், சேலத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்றும், தோனி விளையாடுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியில், சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில், இயற்கை எழில்கொஞ்சும் மலையடிவார சூழலில் இந்த கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. இரண்டு ஆண்டுகள் அயராத உழைப்பில் உருவாகியுள்ள இந்த மைதானம், 16 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஐந்து பிட்ச்சுகளை(PITCH) உள்ளடக்கியுள்ளது இந்த மைதானம்.

இந்நிகழ்ச்சியில் பேசிய டிராவிட், எதிர்கால தலைமுறையினருக்கு இது படிக்கல்லாக அமையும். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்துதான் வர இருக்கின்றனர். சேலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மைதானத்தில் என்னால் விளையாட முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது என கூறினார்.


200 thoughts on “‘சேலத்தில் வாழப்பாடியில் ஐ.பி.எல் போட்டி நடக்கும்; தோனி விளையாடுவார்’ – வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/