தந்தையை இழந்த அமலாபால்
நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் (61) உடல்நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். தமிழில் பிரபலமான நடிகை அமலாபால்.
அமலாபால் “ஆடை” என்ற சர்ச்சையான படத்தில் நடித்து இருந்தார். சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள அதோ அந்த பறவை படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் அமலாபாலுக்கு அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்து உள்ளது. அமலாபாலின் தந்தை பால் வர்க்கீஸ் அவர்கள் இன்று உடல்நல குறைவால் இயற்கை காலமானார். அவருடைய இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ளது.
தந்தையின் திடீர் மறைவு, அமலாபால் உள்ளிட்ட குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Comments are closed.