Saturday, September 12, 2026
LatestNEWS

மது போட்டியில் மரணம் – 10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்!

உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் மது குடிக்கும் போட்டியில் கலந்துகொண்டு, அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் ரத்த வாந்தி எடுத்து மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

அதில் 20 நிமிடத்திற்குள் 4 குவாட்டர் பாட்டில்களை யார் குடிக்கிறாரோ அவர் தான் வெற்றியாளர் என கூறப்பட்டது. இந்நிலையில் இப்போட்டி ஆரம்பித்த 10 நிமிடத்திலேயே நான்கு குவாட்டர் பாட்டில்களை, தண்ணீரே சேர்க்காமல் குடித்து முடித்து பந்தயத்தில் வென்றார் ராஜேந்திர சிங்.

இந்த உற்சாகத்துடன் தன் வீட்டிற்கு வந்து படுத்த ஒரு மணி நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து மயங்கினார். ராஜேந்திர சிங்கின் உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Comments are closed.