79 வயது மூதாட்டி, 21 வயது மாணவி – ஊராட்சி மன்றத் தலைவர்

தமிழகத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து இருக்கிறது.

இதில் மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்திற்குள்பட்ட அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 79 வயது மூதாட்டி வீரம்மாள் போட்டியிட்டார். தள்ளாத வயதிலும் ஊராட்சி மன்றத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் 79 வயது மூதாட்டி வீரம்மாள்.

மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் கே. என்.தொட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி சந்தியா ராணி 210 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

21 வயது கல்லூரி மாணவி ஜெய் சந்தியா ராணி சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் கே என் தொட்டி
பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், இவர் இரண்டாம் வருடம் BCA படித்து வருகிறார்.

அதே போல மதுரை அரிட்டாப்பட்டி பஞ்சாயத்து தலைவராக வீரம்மாள் என்ற 79 வயது பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.Comments are closed.

https://newstamil.in/