‘முடிசூடா தளபதி’ விஜய் மனைவி சங்கீதாவுக்கு விருது!
தமிழ் சினிமாவில் தற்போது சூப்பர் ஸ்டார் லெவலில் உயரத்தில் இருப்பவர் தான் விஜய். இவரது ரசிகர்கள் இவரை தளபதி என்று அன்போடு அழைப்பார்கள்.
இந்நிலையில் விஜய் மனைவி சங்கீதாவுக்கு முடிசூடா தளபதி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1999-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்று சஞ்சய் ஜேசன் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர்.
இவரை விஜயின் பட விழாக்களிலோ அல்லது அவர் கலந்து கொள்ளும் விழாக்களிலோ தான் பார்க்க முடியும். அது தவிர்த்து இவரை தனியாக பார்ப்பது கடினம் தான்.
இந்நிலையில் முதல்முறையாக கலர்ஸ் தமிழ் கலாட்டா.காம் இணைந்து நடத்திய ‘வொண்டர் வுமேன்’ என்ற விருது விழாவுக்கு வருகை தந்துள்ளார். அங்கு அவருக்கு முடிசூடா தளபதி என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை நடிகை சிம்ரன் சங்கீதா விஜய்க்கு வழங்கினார். அப்போது பேசிய சங்கீதா தனக்கு கிடைத்த பாராட்டுக்காக நன்றி தெரிவித்தார்.
Comments are closed.