Monday, September 14, 2026
Latest

தமிழக காங்., தலைவர் அழகிரிக்கு கொரோனா

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று, ஹரியானா மாநில அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இன்று காலை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.