ஊரடங்கு ஜூன் 30 வரை தொடரும் – மத்திய அரசு அறிவிப்பு

நான்காம் கட்ட ஊரடங்கு நாளை முடிவடைய உள்ள நிலையில், தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாளையுடன் நான்காவது கட்ட ஊரடங்கு முடிவடைகிறது. அடுத்த ஒரு மாதத்திற்கு கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் எவையெல்லாம் இயங்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

5-ம் கட்டமாக இன்று மத்திய அரசு அன்லாக் 1. 0 என்ற பெயரில் சில புதிய அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

இன்று வெளியிடப்பட்ட தளர்வுகள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும்:

  • நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நீட்டித்தும், மற்ற பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஊரடங்கின் போது அவசர அத்தியவாசிய தேவைகளை தவிர இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது.

முதல்கட்ட தளர்வுகள்:

  • ஜூன் 8 முதல் ஹோட்டல்கள், ஷாப்பிங்மால்கள் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி.

இரண்டாம் கட்ட தளர்வுகள்

  • இரண்டாம் கட்ட தளர்வுகளில் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகளின் ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்.

மூன்றாம் கட்ட தளர்வுகள்

  • மூன்றாம் கட்ட தளர்வில் சினிமா, பொழுதுபோக்கு பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள், மெட்ரோ ரயில்கள், நீச்சல் குளங்கள் ஆகியன திறப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 வரை எந்த தளர்வுகளும் கிடையாது. பொதுஇடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.


Comments are closed.

https://newstamil.in/