5-ம் கட்ட ஊரடங்கு எப்படி இருக்கும்? 13 நகரங்களில் கடும் விதிமுறைகள் தொடரும்!

4-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், 5-ம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு புதிய வழிமுறைகளை அறிவிக்க உள்ளது. ஆனால் குறிப்பிட்ட 13 பெருநகரங்களில் கடும் விதிமுறைகள் மற்றும் கண்காணிப்புகள் தொடரும் என்கின்றனர்.

தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாக விலக்கலாம் என்று முதல்வர் உடனான ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குனரும் மூத்த விஞ்ஞானியான பிரதீப் கவுர் கூறுகையில், கோவிட் 19 வைரஸ் குறித்து முழுமையாக இன்னும் அறிய முடியவில்லை. ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் நகரங்களில் அதிகமான பாதிப்பு உள்ளது. சென்னையின் பக்கத்து மாவட்டங்கள் தவிர இதர பகுதிகளில் பாதிப்பு குறைவாக உள்ளது.

பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே மாஸ்க் அவசியம்.பல நாடுகளில் 99% மாஸ்க் அணிவதன் மூலமே பரவலை கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 13 பெருநகரங்களின் பட்டியலை மத்திய அரசு தயாரித்துள்ளது. ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் ஐந்தாம் கட்ட ஊரடங்களில் இந்த 13 நகரங்களில் கடும் கட்டுப்பாடுகளும், கண்காணிப்புகளும் தொடரும். தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு இதில் உள்ளன.

இது தவிர்த்து மும்பை, டில்லி, ஆமதாபாத், தானே, புனே, ஐதராபாத், கோல்கட்டா மற்றும் அதை ஒட்டிய ஹவுரா, இந்தூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகியவை அந்த 13 நகரங்கள் ஆகும்.



Comments are closed.

https://newstamil.in/