5-ம் மற்றும் 8-ம் பொதுத் தேர்வு ரத்து – சூர்யா வரவேற்பு
தமிழக அரசு, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முறையை இந்தக் கல்வியாண்டிலிருந்தே அமலாகும் என்று அறிவித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கவிருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்தது இது வரவேற்க்கத்தக்கது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்த சூர்யாவின் ட்விட்டர் பதிவில், ‘படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானதென்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது.
மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது. 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்க்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.