நடிகர் செந்தில் பாஜகவில் ஐக்கியம்

ஜெயலலிதா மறைவை அடுத்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக அரசியல் பணியாற்றி வந்த செந்தில் இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் செந்தில், “ஊழலற்ற ஆட்சி என்பது பாஜகவின் வழக்கம் என்பதால் தான் அக்கட்சியில் இணைந்துள்ளேன். 1988-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பணியாற்றி வந்தேன். ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவில் தனக்கு உரிய இடம் கிடைத்தது.

அவரது மறைவைத் தொடர்ந்து தற்போது நல்ல கட்சியில் இணைய வேண்டும் என்கிற அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருக்கிறேன். இனி பாஜக நல்ல முறையில் வளரும். மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்திருக்கிறேன். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன். தலைமை கூறினால் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன்” என்றார்.


24 thoughts on “நடிகர் செந்தில் பாஜகவில் ஐக்கியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *