கார்த்திக் கைவிட்ட படத்தில் நடித்த விஜய் – எந்த படம் தெரியுமா?
விஜய், ரம்பா, தேவயானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1998ம் ஆண்டு வெளியான நினைத்தேன் வந்தாய் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. படத்தை பார்க்கும் ரசிகர்கள் அது குறித்து ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த படத்தில் முதலில் படத்தை கார்த்திக்கை வைத்து சில காட்சிகள் இயக்குனர் செல்வா பாரதி அவர்கள் எடுத்துள்ளார் . சில நாட்களில் ஏதோ ஒரு பிரச்சனை காரணமாக அந்த படத்தை நிறுத்திவிட்டார்.
பிறகு யோசித்த இயக்குனர் செல்வா பாரதி இதை முதலில் விஜய் மற்றும் கதையை SACயிடம் சொன்னார். இந்த படம் ‘பெல்லி சந்தடி’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்பதால் அந்த படத்தை விஜய் மற்றும் அவர்களது பெற்றோருக்கு திரையிட்டு காண்பித்து உள்ளார்.
கதை பிடித்து போன விஜய் இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்று ஒப்பு கொண்டார். இப்படி தான் ‘நினைத்தேன் வந்தாய்’ படத்தில் வந்தார்.

படத்தில் விஜய்க்கு பன்ச் வசனம் எல்லாம் கிடையாது. எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தேவயானியின் வெகுளித்தனமாக நடிப்பும் படத்தின் ஹைலைட். இடுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணை தேடி விஜய் அலையும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கும்.
இந்த படத்தை பார்க்கும் போது அந்த விஜய்யை எப்பொழுது மீண்டும் திரையில் பார்ப்போம் என்கிற ஏக்கம் பலருக்கும் வருவதை தடுக்க முடியவில்லை.