நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்!
நகைச்சுவை நடிகர் யோகிபாபு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார், இவர் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை இன்று திருமணம் செய்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிகை ஒருவருடன் திருமணம் நடைபெற உள்ளதாக பல தகவல்கள் கடந்த மாதம் வெளியானது.
ஆனால் அந்த தகவல் முற்றிலும் பொய், அது ஒரு வதந்தி என்று நடிகர் யோகி பாபு தெரிவித்திருந்தார். எனக்கு திருமணம் என்றால் அனைவரிடமும் தெரிவிப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு, மஞ்சு பார்கவி என்ற பெண்ணை இன்று திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் யோகி பாபுவின் குலதெய்வ கோவிலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.