திமுக தலைவர் விஜய் – டுவிட்டரில் டிரெண்ட் – அதிர்ச்சியில் திமுக!
திமுக தலைவர் பதவி கடந்த 50 ஆண்டுகளாக கருணாநிதி அவர்களிடமும் தற்போது அவரது மகன் முக ஸ்டாலின் அவர்களிடம் இருந்து வரும் நிலையில் திடீரென இன்று காலை முதல் டுவிட்டரில் திமுக தலைவர் விஜய் என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி உள்ளது.
வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு திமுக விஜய்க்கு சப்போர்ட் செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் விஜய் விவகாரத்தை கிளப்பினார். இந்த விவகாரத்தை அரசியல் செய்ய களமாக்கி இருக்கிறனர். அப்படி ஒரு சம்பவம் தான் #திமுகதலைவர்விஜய். இந்த ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்
‘இளைய தளபதி ஆனார் ஸ்டாலின்… ஆக உண்மை தளபதி என்றும் விஜய்தான் என்று புகழாரம். அறிவாலயத்தில் இன்று கோப்புகளில் கையெழுத்து போட்டு இன்று முதல் திமுக தலைவர் பொறுப்பை ஏற்கிறார் காவலன் விஜய். மிக விரைவில் நடிகர் விஜய் திமுக தலைவராக பதவியேற்க உள்ளார் என்று திமுக source களில் இருந்து தெரியவருகிறது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வழிநடத்த ஸ்டாலினுக்கு திறன் இல்லை என்று பிரசாந்த் கிஷோர் உணர்ந்தார் எனவே இந்த முடிவு எடுக்கப்படுகிறது’ என பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.
தற்போதைய நிலையில் திமுகவை காப்பாற்ற, திமுகவை ஆட்சியில் அமர்த்த விஜய்யால் மட்டுமே முடியும் என்றும் விஜய்யை திமுக தலைவராக முக ஸ்டாலின் அமர்த்தினால் கண்டிப்பாக திமுக ஆட்சியை பிடிக்கும் என்றும் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் கூறி வருகின்றனர்.
திமுக தலைவர் பதவியை விஜய்யிடம் கொடுத்துவிட்டு ஒரே ஒரு முறை அவரை சுற்றுப்பயணம் செய்து வரச் சொன்னால் போதும் திமுக ஆட்சியை பிடித்து விடும் என்றும் அவரது ரசிகர்கள் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர், இந்த ஹாஷ்டாக் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. இது திமுகவினர் பலரையும் முணுமுக்க வைத்துள்ளது.