வெள்ளிக்கிழமை, அக்டோபர் 2, 2026
ENTERTAINMENT

திமுக கையெழுத்து இயக்கம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது: ராதாரவி

சென்னை சாலிகிராமத்தில் பாஜகவின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக தேசிய செயலர் முரளிதரராவ்
அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய நடிகர் ராதாரவி, தமிழகத்தில், பாரதியாருக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும் என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து, நடிகர் ரஜினி சரியான கருத்துகளை பேசி வருவதாக கூறிய அவர், திமுக நடத்தும் கையெழுத்து இயக்கம், நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் எனவும் விமர்சித்தார்.