நயன்தாரா விக்கியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவின் பழைய காதல் ஜோடியாக இருந்தாலும் இன்னமும் ஹாட் ஆன காதல் ஜோடியாக இருப்பவர்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவன். அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஜோடியாக புகைப்படங்களை வெளியிட்டு சில திரையுலகினருக்கும், பல ரசிகர்களுக்கும் புகைச்சலை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நயன்தாரா அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுபவர். இந்நிலையில் அவர் தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். புகைப்படங்களில் நயன்தாரா மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.

nayanthara and vignesh shivan chirstmas celebration photos going viral

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “சூப்பர் அன்பான இயக்குநரே. புகைப்படங்களை வெளியிடுவது எல்லாம் நன்றாக உள்ளது. ஆனால் திருமணம் செய்து கொண்டு தம்பதியாக இப்படி புகைப்படங்கள் வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். ரொம்ப கஷ்டப்பட்டவர் நயன்தாரா, அவரை கைவிட்டுவிடாதீர்கள்.”

nayanthara and vignesh shivan chirstmas celebration photos going viral

திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக நயன் – விக்கி காதலில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் இணையதளத்தில் உலா வந்தது. தற்போது இந்தப் புகைப்படங்கள் மூலம் அவர்களது உறவில் எந்த மாற்றமுமில்லை என்பது தெரியவந்துள்ளது.

nayanthara and vignesh shivan chirstmas celebration photos going viral

மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவனை விரைவில் திருமணம் செய்யப் போகிறார். அதனால் தான் கோவில்களுக்கும் ஜோடியாக செல்கிறார்கள் என்கிற பேச்சு கிளம்பியுள்ளது.Comments are closed.

https://newstamil.in/