கள்ளக்காதல் விவகாரம் – சீரியல் நடிகை ரேகா கணவர் தற்கொலை!

சின்னத்திரை நடிகையான ரேகாவின் கணவர் தீடீர் என்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சென்னை பெரம்பூர், நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத்(39), இவர் அண்ணாநகர், டி.வி.எஸ். காலனியில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரேகா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் துணை நடிகையாகவும் இருந்து வருகிறார். இவர்களது திருமணம் காதல் திருமணம், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் விடுமுறை முடிந்து இன்று காலை அலுவலகத்தை திறக்க ஊழியர்கள் வந்தனர். அலுவலகத்தை திறந்து உள்ளே சென்றபோது அங்கிருந்த அறையில் கோபிநாத் தூக்கு போட்டு தொங்கியபடி இருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினார்கள்.

கோபிநாத்திற்கு தான் வேலை செய்யும் இடத்தில ஒரு பெண்ணுடன் தவறான உறவு இருந்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதற்கும் மேல் கடன் பிரச்னை இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் நேற்று தனது மனைவியிடம் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டதையடுத்து அலுவலகத்திற்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்துள்ளார்.


154 thoughts on “கள்ளக்காதல் விவகாரம் – சீரியல் நடிகை ரேகா கணவர் தற்கொலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/