பாடகி வாணி ஜெயராம் மர்ம மரணம்!

திரையிசைப் பாடகி வாணி ஜெயராம் மரணமடைந்த நிலையில், இயற்கைக்கு மாறான மரணம் என்று காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ளது வாணி ஜெயராமின் வீடு.

இங்கு அவர் தனியே வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு பணிப்பெண் மலர்க்கொடிி என்பவர் வந்துள்ளார். காலை 10.30 மணிக்கு வந்த அவர் நீண்ட நேரமாக கதவை தட்டியும் வாணி ஜெயராம் திறக்கவில்லை. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸாருக்கு மலர்க்கொடி தகவல் கொடுத்தார்.

அந்த தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் வசித்து வரும் வாணி ஜெயராமின் சகோதரி உமாவுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின்பேரில் அவர் அங்கு எடுத்து வந்த கூடுதல் சாவி மூலம் வாணி ஜெயராமின் கதவு திறக்கப்பட்டது. உள்ளே போய் பார்த்த போது வாணி ஜெயராம் தலையில் அடிபட்டவாறு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த வழக்கை போலீஸார் இயற்கைக்கு மாறான மரணமாக பதிவு செய்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் ஆய்வு நடத்தப்படுகிறது. தடயவியல் துறை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ஆரம்பத்தில் அவர் கீழே தவறி விழுந்து அங்கிருந்த டேபிளில் இடித்துக் கொண்டிருக்கலாம் என்றுதான் நாங்கள் கருதினோம். ஆனால் அவருடைய முன்னந்தலையில் காயம் இருந்தது.

எனவே இந்த மரணத்தை இயற்கைக்கு மாறான மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர். அக்கம்பக்கத்தாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அது போல் யாரேனும் சந்தேகத்திற்கு இடமான நபர்களை பார்த்தீர்களா என்றும் போலீஸார் கேட்டு வருகிறார்கள். இவர் கடந்த 1974 ஆம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் பாடிய மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற பாடல் சூப்பர் ஹிட்டாகும்.

பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட மொழிகளில் 1000 துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. சுமார் 19 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். கிட்டதட்ட 50 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து வந்தார். இதுவரை பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளை 3 முறை பெற்றுள்ளார். இது மட்டுமல்லாமல் தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்களில் இருந்தும் விருதுகளை பெற்றுள்ளார்.

தேசிய விருதுகளை வாங்கி குவித்த வாணி ஜெயராம், நாடு முழுவதும் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பத்ம விருதுகள் கிடைத்தவுடன் தனது பாடலை 50 ஆண்டுகளாக கேட்டு வரும் ரசிகர்களுக்கு மிகவும் நன்றி என வாணி ஜெயராம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல்கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Comments are closed.

https://newstamil.in/