பரபரப்பு அறிக்கை – ‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் ‘அடுத்த மாதம் கட்சி தொடங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ந்தேதியன்று வெளியிடப்படும்’ என்றும் கடந்த 3-ந்தேதி அறிவித்து இருந்தார். இந்த நிலையில், தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் ரஜினிகாந்த் நேற்று மாலை சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு மாலை 6.30 மணிக்கு வந்தடைந்தார். ரஜினிகாந்த் உடன் அவருடைய மகள் சவுந்தர்யா காரில் அமர்ந்திருந்தார்.

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், அடிக்கடி ரத்த அழுத்தத்தை கண்காணித்துக்கொண்டு, ஒரு வார காலத்துக்கு வீட்டில் முழு ஓய்வில் இருக்கவேண்டும். உடல் ரீதியான குறைந்தபட்ச செயல்பாடு இருக்கவேண்டும். மன அழுத்தத்தை தவிர்க்கவேண்டும்.இந்த நிபந்தனைகளோடு, கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையையும் அவர் தவிர்க்கவேண்டும் என்று ரஜினிகாத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரஜினிகாந்த் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சென்னால் நாலு பேர் நாலுவித்மாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுகு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி என்னக்கு மட்டும் தான் தெரியும். என பதிவிட்டுள்ளார், இது குறித்த 3 பக்க அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

Image
ImageImage


Comments are closed.

https://newstamil.in/