தளபதி 67-ல் களமிறங்கிய நடிகர்கள்
நடிகர் விஜய்யின் வாரிசு படம் சர்வதேச அளவில் வசூல்மழை பொழிந்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே அவரது தளபதி 67 படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படமான ‘தளபதி 67’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், தளபதி ரசிகர்கள் நேற்றிலிருந்து இணையத்தில் ட்ரெணட் செய்து வருகின்றனர்.
நேற்று படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராகவும், படத்தொகுப்பாளராகவும் முறையே மனோஜ் பரமஹம்சா மற்றும் பிலோமின் ராஜ் ஆகியோர் பணியாற்றுகின்றனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நடிகர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.
தற்போது, அதன்படி செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சஞ்சய் தத் ஏற்கனவே, கேஜிஎப் திரைப்படத்தில் அதீரா என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார்.
இவர் இந்த திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்று முன்பே தகவல் வெளியான நிலையில், இப்பொது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி அதனை உறுதி செய்துள்ளது. மேலும், ஒரு மணி நேரத்திற்கு பெரு அப்டேட் விடுவதாக தெரிவித்துள்ளது. அதன்படி, சஞ்சய் தத் நடிப்பதை உறுதி செய்து அடுத்த ஒரு மணி நேரத்தில் கோலிவுட் நடிகை பிரியா ஆனந்தும் நடிக்கிறார் என்று அறிவித்துள்ளது.
ஏற்கனவே, சாண்டி மாஸ்டர் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று அறிவித்ததை தொடர்ந்து, மிஷ்கின் நடிப்பதாக அரவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், நடன இயக்குனரும் நடிகருமான சஞ்சய் தத் மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் வரவிருக்கும் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக அறிவித்தனர்.
நடன மாஸ்டர் சாண்டியும் இயக்குனர் மிஷ்கினும் படத்தில் ஒரு கலக்கு கலக்க போகிறார்கள் என்பது மற்றும் தெளிவாக தெரிகிறது. இது லோகேஷின், LCU கீழ் வர போகிறதா இல்லையா என்பது பின்னர் தான் தெரிய வரும்.
இது குறித்து இயக்குனர் மிஷ்கின் கூறுகையில், “21 ஆண்டுகளுக்கு முன்பு நான் விஜய் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன், இத்தனை வருடங்களாக மாறாத ஒன்று, நாங்கள் பகிர்ந்து கொள்ளும் பந்தம் இது. பரஸ்பர அன்பு மற்றும் குறிப்பாக இது என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்துகிறது. உங்கள் அனைவரையும் தளபதி 67 உடன் திரையரங்குகளில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும, சாண்டி மாஸ்டர் எழுதியுள்ள குறிப்பில், “எங்கள் அன்பான லோகேஷ் கனகராஜ் இயக்கிய தளபதி 67 படத்தில் நான் நடிகராக இருப்பது ஒரு சிறப்பு மற்றும் புதிய உணர்வு எங்கள் ஒரே தளபதி விஜய் சார்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தளபதி 67 படத்தின் தயாரிப்பாளர்கள், வரிசையாக இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த படத்தில் இயக்குனர் லோகேஷுக்கு மிகவும் பிடித்த நடிகரான மன்சூர் அலிகான் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே, சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோர் வரவிருக்கும் படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஆக்ஷன் கிங் அர்ஜுன், விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார். தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்களை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து கும்பளாங்கி நைட்ஸ் போன்ற மலையாள திரைப்படங்களில் நடித்த மேத்யுவ் தாமஸ் தளபதி 67 திரைப்படத்தில் இணைந்துள்ளார். அவர்களைத் தொடர்ந்து கெளதம் வாசுதேவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர்.
Comments are closed.