விஜய்யின் நடனம் வியப்பளிக்கிறது – ஹிருத்திக் ரோஷன்

ஹிருத்திக் ரோஷன் தனது நடிப்பு மற்றும் நடன திறமையால் ரசிகர்களையும் விமர்சகர்களையும் மீண்டும் மீண்டும் கவர்ந்துள்ளார். ஆனால், இந்த முறை நடிகர் விஜய் நடன திறனைப் பற்றி பேசியுள்ளார். விஜய் நடனமாடும் போது அவரிடம் இருக்கும் எனர்ஜியை பார்த்து வியந்ததாக பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் சென்னை வந்தார். ஹிருத்திக் ரோஷன் சென்னையில் உள்ள பிரபலமான மால் ஒன்றில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் நடனமாடி உற்சாகமூட்டினார். நடிகர் விஜய்யின் நடனம் குறித்து ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் ஹிருத்திக் ரோஷன், “அவர் நடனத்துக்காக ஸ்பெஷல் டயட் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். நடனத்தின்போது அவரிடம் இருக்கும் எனர்ஜியை பார்த்து வியக்கிறேன். நடனமாடுவதற்கு முன் அவர் என்ன உணவுகளை உட்கொள்கிறார் என்று கேட்டு கற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.

மேலும் அல்லு அர்ஜுனின் நடன திறமையை ரித்திக் பாராட்டினார். அவரைப் பாராட்டிய ரித்திக், “கடவுளே, அவர் மிகவும் ஆற்றல் மிக்கவர், வலிமையானவர், ஊக்கமளிப்பவர்” என்றார்.


80 thoughts on “விஜய்யின் நடனம் வியப்பளிக்கிறது – ஹிருத்திக் ரோஷன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *