சேர் எடுத்துட்டு வாடா – தொண்டர் மீது கல்லை எறிந்த அமைச்சர் நாசர் – தீயாய்ப் பரவும் வீடியோ!
திமுக சார்பில் நாளை நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் திருவள்ளூர் அருகே வேடங்கிநல்லூரில் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
இதனை முன்னிட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், வந்திருக்கும் நிர்வாகிகள் உட்காருவதற்கு நாற்காலிகளை எடுத்து வரும்படி கட்சித் தொண்டர்களிடம் கூறினார்.
கட்சி நிர்வாகிகள் அதிக அளவில் இருந்த நிலையில், ஒருசில நாற்காலிகள் மட்டுமே எடுத்து வரப்பட்டதோடு, தாமதமும் ஆனதால் தனது கோபத்தை தொண்டர்கள் மீது அமைச்சர் நாசர் வெளிப்படுத்தினார். அமைச்சர் சா.மு.நாசர், தொண்டர்கள் மீது கல்லை எடுத்து வீசினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Comments are closed.