பிரபல நடிகைக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்தது!
சில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாக்ராமில் பதிவு ஒன்று போட்டிருந்தேன், அதில் ‘சிறிய தேவதை’ சமீஷாவின் பிறப்பை அறிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். வீட்டில் ஜூனியர் எஸ்.எஸ்.கே பிறந்து இருக்கிறார்கள், அவரது இரண்டாவது குழந்தை மற்றும் பிப்ரவரி 15 அன்று பிறந்ததாக கூறினார்.
பஷீகர் என்ற படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வந்து முன்னணி ஹீரோயின் ஆனார்.
இவர் தமிழில் குஷி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். 2009 ல் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் உரிமையாளர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார்.

இவர்களுக்கு 2012 ல் வியான் ராஜ் குந்த்ரா என்ற மகன் பிறந்தான். தற்போது ஷில்பாவுக்கு வயது 44. அண்மையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாக தகவல் வெளியானது.
ஷில்பா கூறும் போது “அற்புதமான அணி மற்றும் மேலாளருக்கு” நன்றி தெரிவிக்கிறேன், எல்லாமே அழகாக திட்டமிடப்பட்டது . “பிப்ரவரியில் நான் நீண்ட இடைவெளி எடுப்பதற்கு மற்றும் பெரும்பாலான பணிகளை முடிக்க அவர்கள் எனக்கு உதவினார்கள்” என்று நடிகை கூறுகிறார். இந்நிலையில் ஷில்பா வாடகை தாய் மூலமாக பெற்றெடுத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.