வச்சிட்டாங்க ஆப்பு! படங்கள் தோல்வியை தழுவினால் நஷ்ட ஈடு தரவேண்டும்!

உச்ச நட்சத்திரங்களின் திரைப்படம் தோல்வியை தழுவினால் அந்த நடிகர்களே நஷ்ட ஈடு தரவேண்டும் தியேட்டர் அதிபர்கள் கூட்டத்தில் தீர்மானம்.

கோவை, சின்னியம்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட தியேட்டர் உரிமையாளர்களின் ஆலோசனை நடைபெற்றது.

தியேட்டர் அதிபர்கள் சந்தித்து வரும் நஷ்டங்கள், அதிலிருந்து எப்படி மீள்வது, தமிழக அரசிடம் வைக்க கூடிய கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

அதன் விபரம் வருமாறு:

  1. தமிழக அரசின் மாநில வரி 8%-ஐ வரும் பிப்ரவரி மாத்திற்குள் திரும்ப பெற வேண்டும், இல்லை என்றால் மார்ச் 1 ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும்.
  2. பட தயாரிப்பாளர்கள் படம் வெளியான 100 நாட்களுக்குள் டிஜிட்டல் தளத்தில் (அமெசான், நெட் ப்ளிக்ஸ்) படத்தை வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் அந்த தயாரிப்பாளர்களின் படத்தை திரையரங்குகளில் இனி வெளியிட மாட்டோம்.
  3. உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் தோல்வியை அந்தந்த நடிகர்களே ஏற்று தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும்.

கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் காராசாரமான விவாதம் நடைபெற்றது.


26 thoughts on “வச்சிட்டாங்க ஆப்பு! படங்கள் தோல்வியை தழுவினால் நஷ்ட ஈடு தரவேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *