இந்தியன் 2 விபத்து – கண்ணீர் முட்டுகிறது: நடிகர் சிம்பு உருக்கம்

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தை நினைக்கும் போது கண்களில் நீர் முட்டிக்கொண்டு வருவதாக நடிகர் சிம்பு வேதனை தெரிவித்துள்ளார், இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

இதில் மது, இந்திரன் மற்றும் உதவி இயக்குநர் கிருஷ்ணா ஆகியோர் உயிரிழந்தனர் இதுகுறித்து நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்தியன் 2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. எத்தனைக் கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்?. அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்கக் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது” என சிம்பு கூறியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *