நடிகர் ராணாவின் காதலி இவர்தான்; ராணா ட்விட்டரில் பகிர்வு!
நடிகர் ராணா தான் காதலிக்கும் பெண் திருமணத்துக்குச் சரி என்று சொல்லிவிட்டார் என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பாகுபலி நடிகர் ராணா பிரபல தெலுங்கு திரைக்குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தாத்தா, அப்பா என பலரும் தெலுங்கு சினிமாவில் புகழ் பெற்ற தயாரிப்பாளர்கள். 2010 ஆம் ஆண்டு ’லீடர்’ என்ற தெலுங்குப் படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராணா.
நடிகை திரிஷாவும் ராணா டக்குப்பதியும் தீவிரமாக காதலித்து வந்தனர். கோலிவுட் டோலிவுட் என கொடிக் கட்டி பறந்தது இந்த செய்தி.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் காதல் பிரேக்கப் ஆனது. இதனை தொடர்ந்து, இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். நடிகர் ராணா டக்குபதி காதல், திருமணம் என்ற எந்த கமிட்மென்ட்டுமே இல்லாமல் இருந்தார்.
நீண்ட நாட்களாகவே ராணாவின் திருமணம் குறித்த வதந்திகள் வந்தபடி உள்ளன. அவ்வப்போது நடிகையைக் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டார். தற்போது தனது காதலி யார் என்பது பற்றி ராணாவே வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் 35 வயதான ராணா டக்குபதி இன்று தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் மூலம் தனது காதலை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
ஹைதராபாதைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ்தான் ராணாவின் காதலி. அவர் இன்டீரியர் டிஸைனராக உள்ளார். ராணாவின் இந்தப் பதிவுக்கு ஸ்ருதி ஹாசன், தமன்னா, அனில் கபூர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.