தர்ஷன் ஏமாற்றியதாக சனம் ஷெட்டி புகார்! என்ன நடந்தது? – வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்ற தர்ஷன், தன்னுடன் நிச்சயம் செய்து விட்டு திருமணத்திற்கு மறுப்பதாக நடிகை சனம் ஷெட்டி புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகர்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக பழி சுமத்துகிறார், தர்ஷன் குறித்து கதறும் காதலி சனம் ஷெட்டி, உடன் நடிக்கும் நடிகர்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக தன் மீது தர்ஷன் அபாண்டமாக பழி சுமத்துவதாக நடிகை சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்தவரும், மாடலுமான சனம் ஷெட்டி, இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த சனம் ஷெட்டி, “இலங்கை சென்று அவரது பெற்றோரை சந்தித்து பேசினேன். அவர்களும் உதவவில்லை. அவரது அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் வந்து என்னை வீட்டின் கேட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டனர். தர்ஷன் என்னை மிரட்டுகிறார். நீ கேஸ் போடுவதென்றால் போட்டுக்கொள். உன்னை எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியும் என மிரட்டுகிறார்” என சனம் ஷெட்டி கூறியுள்ளார்.

கடந்த 2019 மே மாதம் தர்ஷனுடன் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் பெங்களூருவில் நடந்ததாக கூறினார். இதுவரை 15லட்சம் ரூபாய் தர்ஷனுக்கு செலவு செய்துள்ள நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ள அவர் மறுப்பதாக குற்றம்சாட்டினர்.

நிச்சயம் முடித்துவிட்டு தர்ஷன் திருமணம் செய்ய மறுப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி, தர்ஷன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார். அதாவது, தர்ஷனுக்கும், தனக்கும் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறி அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.

அதே ஆண்டு ஜூன் 10ம் தேதி திருமணம் நடக்கவிருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருமணத்தை தள்ளி வைத்தார் என்றும் கூறினார்.

மேலும் தன்னுடன் நடிக்கும் சினிமா நடிகர்களையும், தன்னையும் இணைத்துப் பேசும் தர்ஷன், நடிகர்களுடன் தனக்கு கள்ளத் தொடர்பு உள்ளதாகவும் தனது கேரக்டர் குறித்து தரக்குறைவாக பேசுவதாகவும் கூறினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *