மத்திய பட்ஜெட் 2020 LIVE

12:49 PM பட்ஜெட் உரையை முழுமையாக வாசிக்க முடியாமல் சமர்ப்பித்தார் நிர்மலா

12:43 PM ஆதார் அடிப்படையில் உடனடி பான்கார்டு; பான் கார்டு விண்ணப்பங்களை இனி நிரப்ப தேவையில்லை, ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைன் முறையில் விரைந்து பான் கார்டு வழங்கப்படும்- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

12:39 PM டிவிடென்ட் விநியோக வரி ரத்து

12:37 PM 100 கோடி வரை ஆண்டு வர்த்தகம் செய்வோருக்கு லாபத்தின் மீது 100% வரி விலக்கு- நிர்மலா சீதாராமன்

12:36 PM வருமான வரி விகிதங்கள் குறைப்பு; ரூ. 5 – 7.5 லட்சம் வரை வருமான வரி 10% குறைப்பு

12:34 PM 2020 -21 ல் பொருளாதார வளர்ச்சி 10 % ஆக இருக்கும்

12:31 PM குறைந்த விலை வீட்டுத் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக, வரி விடுமுறையை இன்னும் ஒரு வருடம் நீட்டிப்பு

12:27 PM: தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கு ரூ.85 ஆயிரம் கோடி ; பட்ஜெட்டில் நிதி

12:24 PM: சுகாதாரத் துறைக்கு 69,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

12:21 PM: ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வு அருங்காட்சியகம்

12:18 PM: ஒரு லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி

12:15 PM: சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் விரைவில் அறிமுகம்- நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

12:11 PM: வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும், பட்டப்படிப்பு அளவிலான ஆன்லைன் ப்ரோக்ராம் அறிமுகம் செய்யப்படும்- நிர்மலா சீதாராமன்

12:08 PM: 2024க்குள் 100 புதிய விமான நிலையங்கள்

12:05 PM: 2020 – 21-ல், பாரத் நெட் வழியாக 1 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு இணைய வசதி. 6,000 கோடி நிதி ஒதுக்கீடு

12:03 PM: டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் 2023க்குள் முடிக்கப்படும்- நிர்மலா சீதாராமன்

12:00 PM: சுற்றுலா தளங்களை இணைக்க கூடுதல் தேஜஸ் ரயில்கள்

11:59 AM: ரயில் பாதையை ஒட்டி சூரிய மின் உற்பத்தி

11:57 AM: ரூ.3 லட்சத்திற்கு மேல் ரொக்க பரிமாற்றத்திற்கு தடை

11:53 AM: கட்டமைப்பு மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி

11:50 AM: அனைத்து மாவட்டங்களிலும் மலிவு விலையில் மருந்து

11:48 AM: ரூ.99, 300 கோடி கல்வித்துறைக்கு நிதி

11:45 AM: ஆன்லைனில் படித்து பட்டம் பெற அனுமதி

11:42 AM: நாடு முழுவதும் டாக்டர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும்

11:40 AM: 2022 ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும். 2025-ஆம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை இரண்டு மடங்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்

11: 38 AM: ரூ.15 லட்சம் கோடி விவசாய கடன் இலக்கு

11:35 AM: 20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்ப்

11:34 AM: சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதி உதவி

11:33 AM: கிராம பெண்கள் முன்னேற்றத்திற்கு தான்ய லட்சுமி திட்டம்

11:30 AM: ஔவையார் எழுதிய ஆத்திச் சூடி குறித்து பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார் நிர்மலா சீதாராமன், ‘பூமி திருத்தி உண்’ என ஆத்திச்சூடியில் ஔவையார் குறிப்பிட்டுள்ளார்



11:27 AM: பட்ஜெட் 2020ன் மூன்று முக்கிய அம்சங்கள்: 1. இந்தியாவின் விருப்பம், 2. பொருளாதார வளர்ச்சி 3. அக்கறையுள்ள சமூகம்: நிர்மலா சீதாராமன் உரை

11:08 AM: ஜிஎஸ்டி வரி விதிப்பு நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்தம் – நிர்மலா சீதாராமன்
10:58 AM: பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

10: 41 AM: பார்லி., வந்தார் நிர்மலா சீதாராமன்

10:40 AM: தற்போது 2.5 லட்சம் ரூபாயாக இருக்கும் வருமான வரி வரம்பு, இந்த பட்ஜெட்டில் 5 லட்சமாக அதிகரிக்குமா..?

10:09 AM: ஜனாதிபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

8:21 AM: வரிக் குறைப்பு இருக்காது.. பட்ஜெட்-இல் புதுப் பிரச்சனை..!

7:51 AM: இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நிறைய சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. வருமான வரி குறித்த முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரம் இந்த நிதியாண்டில் 5 டிரில்லியன் டாலராக மாற ஆண்டுக்கு 8 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருளாதார மந்தநிலையை மேம்படுத்தும் அறிவிப்புகள், வேலைவாய்ப்பு, தங்க கையிருப்பு, பணமதிப்பு, வருமான வரிக் குறைப்பு,ஜிஎஸ்டி வரிக் குறைப்பு, வட்டிக் குறைப்பு, வீட்டு வசதித் திட்டம், வருமான வரிச் சலுகைகள் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது,.



Comments are closed.

https://newstamil.in/