வால்டர் விமர்சனம் | Walter review

வால்டர் - விமர்சனம்
  • Critic's Rating
  • Avg. Users' Rating
2

வால்டர் - விமர்சனம்

கும்பகோணத்தில் கைக்குழந்தைகளின் மர்மமான மரணத்தைத் விசாரிக்க ஒரு போலீஸ்காரர் சிபிராஜ். இவரும் நாயகி ஷிரின் காஞ்வாலாவும் காதலித்து வருகின்றனர். இதே ஊரில் அரசியல்வாதியாக இருக்கும் சமுத்திரகனியை சிபிராஜ் தலைமையிலான டீம் என்கவுண்டர் செய்கிறது.

புதிதாகப் பிறந்த குழந்தைகள் ஊரில் காணாமல் போகிறது, குழந்தையைக் கண்டுபிடிக்க தனது உதவியை நாடும் ஒரு ஜோடியின் வழக்கை அவர் எடுத்துக்கொள்கிறார். பின்னர், இதேபோன்ற வழக்குகளைக் காணும்போது வால்டர் மோசமான விளைவுகளை சந்தேகிக்கிறார், மேலும் குற்றங்களை விசாரிக்க புறப்படுகிறார், அவருடன் அவரது துணை அதிகாரி (சார்லி) உடன் வருகிறார்.

இதற்கிடையில், நகரத்தின் முன்னணி அரசியல்வாதியான ஈஸ்வர மூர்த்தி (பாவா செல்லதுரை) மற்றும் அவரது வாரிசாக கருதப்படும் பாலு (சமுத்திரகனி) ஆகியோருக்கு இடையிலான ஈகோ மோதல் தீவிரமடைகிறது. இதே நேரத்தில் சமுத்திரகனி என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் சிபிராஜ் மீது விபத்தை ஏற்படுத்துகிறார் நட்டி.

இறுதியில் நட்டி யார் என்பதை சிபிராஜ் கண்டுபிடித்தாரா? குழந்தைகளை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? மீதமுள்ள கதையை.

ஒரு வழக்கமான காப் திரைப்படத்திற்கான கதை என்று நன்றாகத் தெரிகிறது, ஆனால் தெளிவற்ற திரைக்கதை மற்றும் படம் பார்க்க வந்தவர்களை ஈர்க்க மறந்துவிட்டார்கள்.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ், மிடுக்கான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் கவனிக்க வைத்திருக்கிறார், மெடிக்கல் கிரைம் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அன்பரசன்.

சிபிராஜ் ஒரு துணிவுமிக்க காவலரின் பாத்திரத்தை மிக அற்புதமாக செய்திருக்கிறார், இவரின் தந்தை சத்யராஜ் போலவே அவரும் போலீஸ் உடையில் கம்பிரமாக தெரிகிறார்.

நட்டி வில்லனாக மிரட்டி இருக்கிறார். நாட்டி மற்றும் பாவா செல்லதுரை ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அழகாக நடித்திருக்கிறார்கள், சமுத்திரகனி மற்றும் ரித்விகா கதாபாத்திரங்கள் அருமை.

தர்ம பிரகாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் ஸ்கோர் செய்திருக்கிறார். ராசாமணியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மெடிக்கல் கிரைம் பற்றி மிகவும் ஆழமாக சொன்ன விதமும், திருப்பங்கள் கொடுத்த விதமும் அருமை. ஒரு சில இடங்களில் தெளிவற்ற திரைக்கதை.

மொத்தத்தில் ‘வால்டர்’ ஒருமுறை பார்க்கலாம்.


28 thoughts on “வால்டர் விமர்சனம் | Walter review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *