தாராள பிரபு – விமர்சனம் | Dharala Prabhu review
இந்தி திரைப்படத்தை ரீமேக் செய்வது எளிதான காரியமல்ல. தமிழிற்கு ஒரு முக்கியமான மற்றும் புதுமையான விஷயத்தைக் கையாண்ட விந்தணு தானம் பற்றிய ஒரு கதையை தாராள பிரபு.
தாராள பிரபு - விமர்சனம்
- Critic's Rating
- Avg. Users' Rating
தாராள பிரபு - விமர்சனம்
இந்தி திரைப்படத்தை ரீமேக் செய்வது எளிதான காரியமல்ல. தமிழிற்கு ஒரு முக்கியமான மற்றும் புதுமையான விஷயத்தைக் கையாண்ட விந்தணு தானம் பற்றிய ஒரு கதையை தாராள பிரபு. இந்தியில் வெளியான விக்கி டோனர் தமிழ் நாட்டிற்கு ஏற்றவாறு தேவையான மாற்றங்களை செய்து தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு மாற்றி மரிமுத்து அதில் ஒரு நல்ல அளவிற்கு வெற்றி பெற்றுள்ளார்.
நடிகர் ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியை தன் வளர்ச்சிக்கான ஒரு களமாக நன்றாக பயன்படுத்திய மிகச்சிலரில் ஒருவர். அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் அவர் அதன் பின் அவர் பியார் பிரேம் காதல் என்ற சூப்பிர் ஹிட் படத்தை கொடுத்தார். அவ்வகையில் அடுத்ததாக வந்துள்ள தாராள பிரபு மீண்டும் அவருக்கு ஒரு சூப்பர் ஹிட் கொடுக்குமான என பார்க்க தாராள மனதுடன் இந்த பிரபுவை பார்க்க செல்வோம்…
பிரபுவாக நம்ம ஹீரோ ஹரிஷ் கல்யாண். ஃபுட்பால் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டு இவர் வீட்டிற்கு ஒரே செல்லப்பிள்ளை. பியூட்டி பார்லர் அம்மாவும் இயற்கை மருத்துவம் பாட்டியும் தான் இவரின் அழகான உலகம்.
பாரிஸ் கார்னரில் செயற்கை கருத்தரிப்பு மையம் நடத்தி வருகிறார் கண்ணதாசன்(விவேக்), அவர் தன்னை தேடி வரும் தம்பதிகளுக்கு விந்தணு தானம் செய்ய ஒரு ஆரோக்கியமான இளைஞரை தேடி அலைகிறார்.
ஹரிஷ் கல்யாண் டைமுக்கு சென்று டைமுக்கு திரும்பும் ஆஃபிஸ் வேலையில்லாமல் இருந்தாலு ஜாலியான இளைஞராக சுற்றி வருகிறார். ஒருநாள் தங்களின் ப்ராடக்டை டெலிவரி செய்யும் போது ஹீரோயினை சந்திக்க காதல் துளிர் விடுகிறது.
விவேக் விந்தணு தானம் செய்ய எப்படி அதற்கு சரியான நபர் ஹரிஷ் கல்யாண் என அவரின் பின்னால் அலைந்து திரிந்து அவரை தானம் செய்ய வைக்கிறார். அதன் பிறகு கண்ணதாசனின் பிசினஸ் வேற லெவலில் நடக்கிறது.
இந்நிலையில் ஹரிஷ் கல்யாண்க்கு நிதி(தான்யா ஹோப்) மீது காதல் ஏற்பட்டு, திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். காதல் திருமணம் கைகூடடினாலும் கணவன் மனைவி இருவருக்கிடையிலும் மனக்கசப்பு, இதற்கிடையில் குழந்தை தத்தடுப்பு என வாழ்க்கை செல்ல ஹரிஷின் வாழ்க்கையில் குழந்தை செல்வம் விசயம் ஒரு எதிர்பாராத பிரச்சனை.
அடிக்கடி விந்தணு தானம் செய்வதால் பிரபுவுக்கும், நிதிக்கும் இடையேயான உறவு முறியும் நிலைக்கு வருகிறது. அதன் பிறகு நடந்தது என்ன என்பதே கதை.
ஹரிஷ் கல்யாண் பிரபுவாக அருமையாக நடித்துள்ளார், ரசிகர்கள், ரசிகைகளை கொண்டவர். முகராசி கொண்டவர் என்பதில் நோ டவுட். லவ், ரொமான்ஸ் படங்களாக அவருக்கு தொடர்ந்து அமைந்து வருகிறது. வழக்கமான காதல், பிரிவு என்பதிலிருந்து சற்று மாறுபட்டு விந்தணு தானம் செய்பவராக அவர் தேர்வு செய்த இந்த கதை கை கொடுத்துவிட்டது. சிம்பிளான, ஸ்டைலிஷான நடிப்பு ஹரிஷ்.
தான்யா ஹோப் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் ஹரிஷ்க்கு இந்த படத்தில் செட்டாவாரா என்ற தோன்றினாலும் ஏற்ற ஜோடிதான் என நம் மனதை மாற்றும் படி நடித்திருக்கிறார். இருவருக்குமிடையிலான ரொமான்ஸ், லவ் காட்சிகள் நோ அலட்டல், நோ திகட்டல்.
பல இடங்களில் விவேக் தான் ரசிகர்களை கவர்கிறார். படத்தில் முக்கியமனாவரே விவேக் டாக்டர் கண்ணதாசனாக படம் முழுக்க நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார். இக்கால தலைமுறைக்கு ஏற்றபடியான காமெடியில் டீசண்டான அடல்ட் காமெடியை மிக்ஸ் செய்து அவ்வப்போது சின்ன சின்ன டோஸ் கொடுப்பது ரசனை. அதுவும் காமெடி மூலம் தன் வயதை குறைத்து இளைஞராக ஈர்த்துவிடுகிறார். சூப்பர் விவேக் சார். நகைச்சுவை செய்ய அவருக்கு சொல்லியா கொடுக்க வேண்டும். அனுபமா, சச்சு ஆகியோரின் நடிப்பும் சிறப்பு.
இயக்குனர் கிருஷ்ணா இப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். ஹிந்தியில் வந்து ஹிட்டான் விக்கி டோனர் என்ற ஹிட் படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி படத்தை கொடுத்துள்ளார்.
தெருவுக்கு தெரு குழந்தையின்மை மருத்துவமனையின் வியாபாரம் அதிகரித்துள்ள இக்காலத்தில் விந்தணுவின் முக்கியத்துவத்தையும், தாம்பத்ய வாழ்கையின் ஆரோக்கியத்தை சிம்பிளாக எடுத்துசொல்கிறார். அவருக்கு கண்டிப்பாக வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும்.
கலர்புல்லான காட்சிகள் ஒளிப்பதிவு, நேர்த்தியான எடிட்டிங், பின்னணி இசை, பாடல்கள் என பலரின் இசை மீட்டல் ஸ்வீட் ரகம்.
தாம்பத்யத்தின் முக்கியத்துவையும், சுய வாழ்க்கை ஒழுக்கத்தையும் ஒரு தந்தை போலவும், மருத்துவராகவும் எடுத்துவைக்கும் விவேக் சாரின் பக்குவம் அருமை. ஹரிஷ் கல்யாண் தாராள குணமும், படித்த இளைஞராக நடந்து கொள்ளும் மனப்பான்மையும் பாசிட்டிவ் வைப்.
மொத்தத்தில் தாராளமாக பார்க்க வேண்டிய படம் இந்த தாராள பிரபு.