முத்தம் கேட்ட விஜய்; கன்னத்தில் கிஸ் அடித்த விஜய் சேதுபதி!

‘மாஸ்டர்’ படப்பிடிப்புத் தளத்தில் விஜய்க்கு வழக்கமான தன் அன்பு முத்தத்தைக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.

விஜயுடன் முதன்முறையாக விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. தற்போது இவர் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதில் அவர் வில்லனாக நடித்து வருகிறார். இப்போது, இப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவுது மாஸ்டர் படத்தின் கலை இயக்குனர் சதிஷ் குமார் பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார். இதனால் மாஸ்டர் செட்டில் அவருக்கு பெரிய அளவில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு இருக்கிறது. அவருக்கு கேக் வெட்டி படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி எப்போதும் போல தன்னுடைய பாணியில் அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனால் விஜயும் அவரிடம் முத்தம் கேட்டுள்ளார்.

இதையடுத்து விஜய் சேதுபதி விஜய்க்கு அவர் கேட்டது போலவே முத்தம் கொடுத்தார். விஜய் கட்டிப்பிடித்து, அவரின் இரண்டு கன்னத்திலும் விஜய் சேதுபதி முத்தம் கொடுத்தார். இதை அங்கிருந்த பலர் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த செஃல்பி இணையத்தில் பெரும் வைரலானது. அதைப் போலவே விஜய் சேதுபதி விஜய்க்கு முத்தம் கொடுத்த புகைப்படமும், வீடியோவும் விரைவில் வைரலாகும் என்பதில் சந்தேகமில்லை.



Comments are closed.

https://newstamil.in/