திங்கட்கிழமை, அக்டோபர் 5, 2026
ENTERTAINMENT

சர்ப்ரைஸ் கொடுத்த சாக்ஷி; ஷாக் ஆனா சேரன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மூலம் மக்கள் மனங்களை வென்றவர் இயக்குனர் சேரன். அவருக்கென ஒரு தனி ஆர்மியே உருவாகிவிட்டது.

பின் தனது பட வேலைகளில் களமிறங்கிய சேரன் பிஸியாக இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த இதே தேதியில் தான் சேரனுக்கும் பிறந்தநாள். பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ரசிகர்கள் அவருக்கு டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் 3வது சீசனின் பிரபலமான சாக்ஷி அகர்வால் கையில் கேக்குடன் சேரன் அவர்களின் வீட்டிற்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.