ஹீரோ, தம்பி மூன்று நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
தமிழ் சினிமாவில் கடந்த வாரம் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ‘ படமும், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா இணைந்து நடித்த ‘தம்பி’ என இரண்டு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அடுத்து எந்த ஒரு பெரிய நடிகரின் படங்கள் ரிலீஸ் இல்லை என்பதால் இப்படங்கள் நன்றாக ஓடிவிடும். தற்போது இப்படங்கள் முதல் வார முடிவில் சென்னையில் ஹீரோ- ரூ. 1.64 கோடி மற்றும் தம்பி- ரூ. 1.06 கோடி வசூலித்துள்ளது.
தமிழகத்தில் வெளியான முதல் 3 நாட்களில் கார்த்தி – ஜோதிகாவின் ‘தம்பி’ திரைப்படம் 5.40 கோடி ரூபாயும், சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம் 10.30 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.