மக்களுக்கு உதவ வீட்டை மருத்துவமனையாக்குவேன் – கமல்ஹாசன்

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது வீட்டை அரசு அனுமதி அளித்தால் தற்காலிகமாக மருத்துவமனையாக்கப் போவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் அவர், “இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/