திரௌபதி விமர்சனம்

சாதிகள் உள்ளதடி பாப்பா என்று சாதியின் பெருமையை சொல்லி தமிழில் ஒரு படம் வருவது ஆச்சரியமானது. வன்னியர்களின் பெருமையை கூறும் படமாகதான் இது இருக்க முடியும். படத்தின் டைட்டிலை வைத்தே இது வன்னியர்களின் வாழ்வியலை கூறும்படம் என்று உறுதியாக சொல்ல முடியும்.

அப்படி என்ன இருக்கிறது இந்த திரௌபதி படத்தில் வாங்க பார்க்கலாம்

திரௌபதி விமர்சனம்
  • Critic's Rating
  • Avg. Users' Rating
2.5

திரௌபதி விமர்சனம்

பிகில் & தர்பார் டிரைலர்க்கு இணையாக ஒரு சாதாரண திரௌபதி தமிழ்ப்படத்தின் டிரைலர் பரபரப்பாக பேசப்பட்டது . சாதியக் கொடுமைகளும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களும் சினிமா படங்களில் அவ்வப்போது பிரதிபலிக்கப்பட்டு வருகின்றன.

மூடர் கூடம், கொளஞ்சி போன்ற படங்களை இயக்கிய நவீன் முகமது அலி தனது ட்விட்டரில் இந்த படத்தின் கதை ‘குப்பை’ என விமர்சித்து இருந்தார்.

மேலும் பா ரஞ்சிதிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்க, உடனே அள்ளு கிளம்பி பா ரஞ்சித் ‘எனக்கு பயமா இருக்கு, எனக்கு அந்த படத்தை பற்றி ஒன்றும் தெரியாது’ திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா ரஞ்சித் இடத்திலிருந்து நகர்ந்து விட்டார்.

சாதிகள் உள்ளதடி பாப்பா என்று சாதியின் பெருமையை சொல்லி தமிழில் ஒரு படம் வருவது ஆச்சரியமானது. வன்னியர்களின் பெருமையை கூறும் படமாகதான் இது இருக்க முடியும். படத்தின் டைட்டிலை வைத்தே இது வன்னியர்களின் வாழ்வியலை கூறும்படம் என்று உறுதியாக சொல்ல முடியும்.

அப்படி என்ன இருக்கிறது இந்த திரௌபதி படத்தில் வாங்க பார்க்கலாம்

படத்தின் நாயகன் ரிச்சர்டு ஊரில் சிலம்ப கலைஞர். அவர் தன் மாமன் மகளான திரௌபதியை மணமுடித்துக்கொள்கிறார். இவரின் சித்தப்பா கிராமத்தில் மரியாதைக்குரிய தலைவராக இருக்கிறார். இவருக்கும் ஒரு மகள்.

தனது குடும்பத்தை கொலை செய்த குற்றத்துக்காக நாயகன் ரிச்சர்ட் ஜாமீனில் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக வாழ்கிறார்.

கிராமத்தில் அழகாக இவர்களின் வாழ்க்கை செல்கிறது. திரௌபதி கிராம மக்களின் நலத்திற்காக பல விசயங்களை செய்து வருகிறார்.

அவரது மனைவியிடம் சொன்ன வாக்குறுதிக்காக சில கொலைகளை செய்கிறார். சமுதாயத்தில் நடக்கும் சில போலி திருமணத்தால் இவரது குடும்பமும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

ஊரில் குளிர்பான கம்பெனிக்காக ஒரு கும்பல் பித்தலாட்டத்தில் ஈடுபடுகிறது. கிராம நலனை பாதிக்கும் இந்த விசயத்திற்கு ஊரும் திரௌபதி குடும்பமும் எதிர்த்து நிற்கிறது.

இதற்கிடையில் கிராமத்தலைவரின் மகள் பதிவு திருமணம் செய்துகொண்டதாக செய்தி வர அவர் உயிர் விடுகிறார். மற்றொரு நாள் எதிர்பாராத விதமாக திரௌபதிக்கும் அவரின் தங்கையும் கொலை செய்ய திட்டம் தீட்டப்படுகிறது.

சிறைக்கு சென்ற ரிச்சர்டு என்ன ஆனார், திரௌபதி ஆபத்திலிருந்து உயிர் தப்பினாரா, அவர்களை பழி வாங்கினாரா, அவரது மனைவிக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேறியதா, அவரின் தங்கைக்கு என்ன நேர்ந்தது என்பதை சொல்கிறது இந்த திரௌபதி.

ரிச்சர்டு அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ஷாலினியின் தம்பி அஜித்தின் மைத்துனர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். கதாநாயகன் ரிச்சர்ட் அமைதியான தோற்றத்திலும், ஆக்ரோஷமான தோற்றத்திலும் நடித்திருக்கும் பாத்திரம் நன்று. ஒரு கலைஞராகவும் மனைவி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கணவராக அவர் நடித்திருக்கிறார். சாதிக்க அவருக்கு இப்படம் ஒரு சரியான கதைக்களம்.

ஷீலா ராஜ்குமார் அழகிய தமிழ் மகள் சீரியலில் நீங்கள் பார்த்திருக்கலாம். பின் டூ லெட், அசுரவதம், நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்திருந்தார். திரௌபதியாக இப்படத்தில் அவர் பேச்சு, செய்கை மூலம் விளாசி எடுக்கிறார். கேரக்டருக்கேற்ற நடிப்பு.

வழக்கறிஞராக வரும் கருணாஸ் மனதில் நிற்கிறார். கருணாஸ் ஒரு பொது நல வழக்கறிஞராக சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும், திரௌபதியின் நியாயத்திற்காக போராடுவதும் என விடாமல் வசனம் பேசுகிறார். இந்த கதாபாத்திரம் அவரின் அரசியல் முயற்சிகளுக்கு கைகொடுக்கும்.

படத்தின் ட்ரைலரை பார்த்து இது வேற மாதிரி படமாக இருக்கும் என்று மிகவும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, எதிர்பார்த்த அளவிற்கு திரைக்கதை இருக்கிறதா என்று, சற்று யோசிக்க வைக்கிறது. படத்தில் சில விஷயங்கள் ஒட்டாதது போல் இருந்ததாக ஒரு உணர்வு எழுகிறது.

படத்தின் இன்னொரு கூடுதல் பலமே ஜுபின் பின்னணி இசை தான். பாடல்கள் ஒன்றும் பெரியளவில் கை கொடுக்கவில்லை. மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவு, தேவராஜின் எடிட், இன்னும் நல்ல படைப்பை எதிர்பார்க்கிறோம். படத்தின் மேக்கிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் திரௌபதி ஒரு விழிப்புணர்வு படம்

Sending
User Review
2 (1 vote)

30 thoughts on “திரௌபதி விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *