விஜய்யை சீண்டும் பா.ஜ.கவிற்கு அதே கட்சியைச் சேர்ந்த இயக்குனர் பேரரசு கண்டனம்!
நெய்வேலியில் விஜய் படப்பிடிப்பின்போது பா.ஜ.கவினர் நடத்திய போராட்டம் தேவையற்றது என பா.ஜ.கவை சேர்ந்த இயக்குனர் பேரரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திரைப்பட இயக்குனரும் பெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்கே செல்வமணி விஜயின் படப்பிடிப்பில் இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்திருப்பது தேவையற்றது என விமர்சித்துள்ளார்.
மேலும் விஜய் படத்தின் படப்பிடிப்புக்கு எதிராக விளம்பர நோக்கத்திற்காக ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.கவினருக்கு அக்கட்சியில் புதிதாக இணைந்த இயக்குனர் பேரரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நெய்வேலியில் விஜய் படப்பிடிப்பில் பாஜகவினர் போராட்டம் தேவையற்றது.
விஜய் நடிகர் , அரசியல்வாதி அல்ல, இதுபோன்ற செயல்பாடுகள் பாஜகவின் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாகும், அவருடைய கோடான கோடி ரசிகர்களுக்கு மன வேதனையை தரும்.
நாட்டில் போராட வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன என கடுமையாக சாடியுள்ளார். பாஜகவைச் சேர்ந்த இயக்குனர் பேரரசுவின் இந்த பதிவால் அப்செட் ஆகியுள்ளார் இதை எதிர்க்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் பாஜகவினர் திணறி வருகின்றனர்.
Comments are closed.