லோகேஷ் கனகராஜுன் அடுத்த படம் கமலுடன்? – வீடியோ

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் அறிமுகமான இயக்குனர்களில் ஒரு சிலர் குறிப்பிடும்படியான இடத்தைப் பிடித்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி இரண்டு படங்களை மட்டுமே இயக்கியவருக்கு விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு மூன்றாவது படத்திலேயே அமைந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஜீ தமிழ் சினிமா விருதுகள் நிகழ்வில் கமல்ஹாசன் கையால் சிறந்த இயக்குனருக்கான விருதை லோகேஷுக்கு வழங்கினார்.

லோகேஷ் பேசுகையில், “நான் யாரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யவில்லை. எனது வாழ்க்கையில் கமல்ஹாசன் நடித்த அனைத்துப் படங்களையும் பார்த்த ஒரு நல்ல விஷயத்தை மட்டும் செய்திருக்கிறேன். அவருடைய படங்கள் தான் எனக்கு ‘கைதி’ எடுக்க இன்ஸ்பிரேஷன் தந்தது,” என்றார்.

அடுத்து பேசிய கமல்ஹாசன், “லோகேஷுக்கு என்னுடைய படங்கள் இன்ஸ்பிரேஷன் என்பது மகிழ்ச்சி. அந்த விதத்தில் நானும் ‘கைதி’ படத்தின் இயக்குனர் தான். நானும் சில விஷயங்களைச் சொல்ல ஆசைப்படுகிறேன். இருந்தாலும் வேறு ஒரு நிகழ்வில் அதைச் சொல்கிறேன்” என்றார்.

இதனால் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் கமல்ஹாசனுடன் தான் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.Comments are closed.

https://newstamil.in/